Monday, 24 September, 2018
யோனி ரோகம்

சரீரத்திற்கு பொருந்தாத உணவு, மேடு பள்ள ஸ்தானத்தில் படுத்தல், வெகு புருஷ சஞ்சாரம், மாதாந்தர ருது தோஷம், ஆண் குறி தோஷம், அனலாதி வெப்பம், தகாதநடத்தை, தேவாதோர யோகம் ஆகிய இச்செய்கைகளை உடைய ஸ்திரீகளுக்கு இந்த ரோகம் பிறக்கும். இதனால் அவ்விடத்தில் கிருமிகள் நெளிவதுபோல சருமம் சுறசுறத்தல் நானாவித நிறத்துடன் நுறையுடன் இரத்தம் வடிதல், தாகம், சுரம், தினவு, வேதனை, சகிக்கக்கூடாத திரவம், சிவந்த நிறத்துடன் அல்குல் சுட்கித்தல், எரிச்சல், வாய்கசகசப்பு, பேதி, கவுட்டியிலும் பிட்டத்திலும் குத்தல், இரண்டு ஸ்தனமும் ஒட்டி உலர்தல் அல்குல் வீக்கம் முதலிய குணங்கள் உண்டாகும். இது 21 வகைப்படும்.


அவையாவன :-

1. வாதயோனி :- இது வாயுவானது அல்குலில் நிலைத்த காலத்தில் பிறக்கும். இதனால் அவ்விடத்தில் கிருமி நெளிவது போலைருத்தல், சருமம் சுறசுறத்தல் அம்மார்கத்தில் கருத்தும், சிவந்தும், நுரைத்தும் சுடுக்கையுடன் கொஞ்சம் இரத்தம் வடிதல் இரண்டு கவுட்டியிலும் நோதல் அடிவயிறு கனத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. பித்தயோனி :- இது பித்த தோஷமானது அல்குல்லில் பரவுங்காலத்தில் பிறக்கும். இதனால் அவ்வழியால் மஞ்சள் கருப்பு நிறத்துடன் சுடுகையாய்ப் பிணநாற்றங் கமழ்கின்ற உதிரம் வடிதல் தாகம், சுரம், சரீரத்தில் அக்கினிச்சுவாலை வீசுதல், துர்க்கந்தம் பிறக்குதல் என்னுங் குணங்களுண்டாகும்.

3. சிலேஷ்ம யோனி :
- இது சிலேஷ்மமானது அல்குலில் தங்குங் காலத்தில் பிறந்து அவ்விடத்தில் சீதளம், தினவு, வேதனையன்றி
வெளுத்த ரத்தம் ஒழுகுதல் என்னுங் குணங்களுண்டாகும்.

4. உதாவர்த்த யோனி :- அல்குல் ஸ்தானத்தில்மிகுந்த உபத்திரவத்தையும் அம்மார்க்கத்தில் நுறைத்த ரத்த ஒழுகையும்

உண்டாக்கும்.

5. உப்புலுத யோனி :- அல்குல் ஸ்தானத்தை வெண்மையாக்கி அச்சருமத்தை நையப்பண்ணும். இதனால் அவ்விடம் சுட்கித்துப் பஞ்சடித்த களம்போல திறந்திருக்கும்.

6. ரத்த யோனி :- இது நிதம்பஸ்தானத்தில் சகிக்ககூடாத உபதிரவத்தையும், மிகுந்த ரத்த ஒழுக்கையும் உண்டாக்கும்.

7. சாதக்கினி யோனி :- இது அல்குல்வாயில் வெடியெழும்பிய பீரங்கிவாயின் சுடுகையைபோல் சுடுகையை உண்டாக்குவதுமின்றி அவ்விடத்து உதிரத்தையும் கொதிப்பிக்கும். இதனால் வயிற்றில் ஏழுமாதத்திற்கு உட்பட்ட சிசுவாயிருந்தாலும் மரித்து விழும்.

8. அந்தர்முகி யோனி :- எந்த ஸ்திரீயாவது வயிறுநிரம்ப உடனேமேடுபள்ள ஸ்தானத்தில் படுத்து, கடினசையோகத்துக்கு இடங் கொடுக்குங்காலத்தில் பிறக்கும். அம்மாதுக்கு வாயு பிறபித்து அர்ந்தர்முகமாக எழும்பி யோனிஸ்தானத்தில் உபத்திரவகளும், அதை விரிக்ககூடாமையும் பூ ஒதுங்குவதால் அங்குல்கள் எலும்பு மாமிசாதிகளில் வேதனையும் அடிவயிற்றிற் சூலையை உண்டாக்கும்.

9. சுட்க யோனி :- இது மாதாந்தர ருதுகாலத்தில் புணர்ச்சியுடன் விரும்பிய மாதர்களுக்கு பிறக்கும். எப்படியெனில் சுபாவம் விழுகின்ற ரத்தமாந்து சையோகத்தில் உள்ளுக்குள்ளே
பட்டு மலமூத்திரசிக்கலை நாள்தோறும் பிறபித்து கொண்டே யிறுந்து அதன்பின் கடி தடத்தில் மெலிவையும் உபத்திர த்தையும் உண்டாகும்படி செய்யும்.

10. வாமினி யோனி :- இது வாயுவைக்கொண்டு பிரசவித்த நாளிலாவது ஏழுநாளிலாவது கருப்பாசயத்தில் இருக்கின்ற உபதிரவத்தை ஒழுக செய்யும். இதனால் உபதிரவ மிருதுவாகும்.

11. சுட்க யோனி :- இது வாதபித்தகபங்களினால் யோனி உண்டாகும் உதிரமானது உலரப்படுங்காலத்தில் பிறக்கும். இதனால் அந்த இடத்தில் சிவந்தநிறமும் சுட்கமும் எரிச்சலும் உண்டாகும்.

12. பரிப்புலுத யோனி :- இது சையோக காலத்தில் தும்மலை யும், ஏப்பத்தையும் அடக்குவதால் பிறக்கும். இதனால் யோனி ஸ்தானம் உப்பல், அதைத்தொடக ்கூடாதவேதனை, கறுப்பும் மஞ்சளுங் கலந்த நிறமாக ரத்தம் ஒழுகுதல், நோயோடு கனப்பு, ஒரு வேளை பேதி, அரோசகம், கவுட்டியிலும் புட்டத்திலும் குத்தல், சுரம் என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

13. மகாயோனி :- வாயுவானது யோனி ஸ்தானத்திலும், வயிற்றிலும், கருப்பஸ்தானத்திலும், சஞ்சரித்துப் பூரிக்கும்போது பிறக்கும். இதனால் அல்குலானது நாளுக்குநாள் துர்-மாமிசத்தினால் மென்மேலும் வளர்ந்து விசாலமாகப் பருப்பதுமன்றி சில வேளை மிகுந்த நோயைத்தரும்.

14. ஷண்டயோனி :- இது கருப்பகாலப்புணர்ச்சியால் பிறக்கும். எப்படியெனில் புருஷனுடைய விந்துவின் சுடுகையினால் அல்குல் ஸ்தானம் வெந்த மாமிசம்போலாகுவது மன்றி சிலநாட்
சென்று இரண்டு ஸ்தனமும் ஒட்டி உலர்ந்துவிடும். பின்பு இந்த ஸ்திரீயானவள் புருஷனைச் சொப்பனத்திலும் விரும்பாள்.

15. அதிசாண யோனி :- இது பருத்த ஆண்குறியுடைய புருஷ சையோக மிகுதியினால் பிறக்கும். இதனால் அல்குலில் வீக்கமும் கன உபத்திரவமும் உண்டாகும்.

16. சூசிமுகயோனி :
- இது வாதாதிக்கவஸ்த்துகளை மிதமின்றி நித்தியமும் புசித்து உடனுடனே புணருவதால், வாயு கருப்பாசய ஸ்தானத்தில் நிலைக்கப்படுங்காலத்தில் பிறக்கும். எப்படியெனில் அவ்வாயுவினால் மாமிசம் தூலித்து அல்குலின் துவாரத்தை ஊசி நுழையும் துவாரம்போலாக்கி சையோகத்திற்கு இடம் இல்லாமல் செய்துவிடும். ஒருவேளை வலுவில் யத்தனித்தால் அதிக உபாதியும் ரத்தப் பிரவாகமும் உண்டாகும்.

17. பராக்சாணயோனி :- இது ருதுவாகா கன்னியர்கள் புருஷ னைப்புணருவதால் கருப்பாசய ஸ்தானத்தில் சேருகின்ற இளம் உதிரமானது கெடுதியை யடையுங்காலத்தில் பிறக்கும். அப்போது அல்குல்ஸ்தானம் அவ்வுதிரத்தால் கலங்கி நிறமாறுவதுமன்றி நடுமுதுகில் குத்தலும், கவுட்டி தொடை என்னும் இடங்களில் நோயும் உண்டாக்கும். இதனால் பலரோக சம்பவம் நீடித்து வரித்தும்.

18. கண்டுலயோனி :- இது மிகுந்த சையோகத்தினால் அல்குல் ஸ்தானத்திலிருக்கின்ற உதிரக் கெடுதியை யடைந்து அதில் கிருமி கள் சனிக்கும்போது பிறக்கும். இதனால் அங்கு அதிக நமைச்சலும் அந்த நமைச்சலினால் எப்போதும் சையோகத்தில் மிகுந்த விருப்பமும் அதனால் இதவும் உண்டாகும்.

19. கர்னிகாயோனி :- இது அகால சையோகத்தால் வாயு அதிகரித்து ரத்தத்தை கெடுக்கும் போது பிறக்கும். இதனால் அல்குலின் துவாரத்தில் வாயுவினால் திரண்ட உதிரமானது துர்மா மிசநிறத்தை யொத்து தாமரைக்காயைப்போலும், விழுது விட்டது போலும் தொங்கும். இதனைச் சிலர் தசை அண்டம் என்பர்.

20. விப்புலதயோனி :- இது அதிமோகங்கொண்டு நினைத்த போதெல்லாம் பலவகைப் பந்தத்துடன் புருஷனைப் புணர்வது மன்றி அப்புருஷனை இடைவிடாது தன் பார்வக்குள் வைத்திருக்கும் காரணத்தால் பிறக்கும். இதானால் அல்குல் ஸ்தான முற்றுங்கலங்குவதும் அதில் மாறாது மத சலம் வடிதலும் தேகம் நாளுக்கு நாள் துர்ப்பலம் படுவதுமாக இருக்கும்.

21. சந்நிபாத யோனி :- இது அல்குல் ஸ்தானத்திலும் கருப்ப ஸ்தானத்திலும் திரிதோஷத்தையும் சஞ்சரிக்கச்செய்து, அவ்விடங்களில் அநேக ரோகங்களையும் மகாவிரணங்களையும் பிறப்பிக்கும். இந்த ரோகத்தை அனுபவிக்கின்ற மாதர்கட்கு ரத்தச்சிராவம், மூலம் ரத்தகுன்மம், அதிதூலம் என்னும் நான்கு ரோகங்களும் ஒருமித்தாவது தனித்தாவது உண்டாகாதிருக்கில் திடகாத்திரமும் நல்ல கருப்பமும் உண்டாகும்.

யோனிரோகங்கள் (வேறு மதாந்திரம்)
 

யோனி ரோகமானது வாதம், பித்தம், சிலேஷ்மம், சந்நிபாதம் எனநான்கு வகைப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐந்து பிரிவுகளை பெற்றிருக்கும்.அவையாவன :-
உதாவர்த்தம், விப்லுதை, பரிப்புலுதை, வாதலை என இவ்வைந்தும் வாததோஷத்தாற் பிறந்த யோனி ரோகங்கள். லோஹிதஷயம், பிரஸ்ரம்சினி, வாமினி, புத்திரக்கினி, பித்தலை எனஇவ்வைந்தும் பித்ததோஷத்தாற் பிறந்த யோனி ரோகங்கள்.

அல்பானந்தம், கர்ணினி, அதிசரணை , அதியானந்தம், சிலேஷ்ம மலம் என இவ்வைந்தும் சிலேத்தும தோஷத்தாற் பிறந்த யோனி ரோகங்கள்.

ஷண்டினி, அண்டினீ, மஹதி, ருசிவகத்திரை, திரிதோஷஜை என இவ்வைந்துஞ் சந்நி பாதமென்ற திரிதோஷக்கூட்டத்தாற் பிறந்த யோனி ரோகங்கள். இவ்விதமாக மாதர்கட்கு 20 வகைப்பட்ட வெளிநோய்கள் உண்டாகுமென அறியக்கிடக்கின்றது.

வாதயோனி ரோகங்கள் :- வாத தோஷத்தினால் பிறந்த ஐந்துவித யோனி ரோகங்களின் லக்ஷணங்களாவன :-

1. உதாவர்த்த யோனி :- இதில் சோணிதமானது நுரையுடனும் கஷ்டமாயும் வெளிப்படும்.

2. வந்தியை யோனி :- இதில் சோணிதமானது மிகவும் கெடுதியாய் வெளிப்படும்.

3. விப்புலுதை யோனி :- இதில் சோணிதமானது சதா வேதனையுடையதாய் வெளியாகும்.

4. பரிப்புலுதை யோனி :- இதில் சோணிதமானது, அதிகரித்த புணர்ச்சியினால் மிகவும் சுருக்கென்று குத்தலுடையதாய் வெளியாகும்.

5. வாதல யோனி :- இதில் சோணிதமானது கடோரமாயும், இருக்கியும், குத்தல், பாதை இவைகள் உடையதாயும் வெளியாகும்.

மேற்கூறிய ஐந்து யோனி நோய்களிலும் வாத தோஷத்தின் குறி குணங்களும் உண்டாகும்.