Monday, 24 September, 2018
விஷபேதம்

இப்பூமியின்கண் விஷமானது கிருத்திரமவிஷம், அகிருத்திரம
விஷம் என இருவகையாம்.

கிருத்திரம விஷம் :- நாபி முதலிய தாவரவிஷங்களையாவது, பாம்பு முதலிய ஜெந்துக்களின் விஷங்களையாவது, மற்றொரு வஸ்துவில் கலந்து கொடுக்கில் கிருத்திரம விஷமாம். இதற்கு இடுமருந்து யென்றும் பெயர்.

ஸ்திரீகள் புருஷசர்களையும், புருஷர்கள் ஸ்திரீகளையும் தொழி லாளிகள் தங்கள் யசமானனையும் வசப்படுத்தும் பொருட்டு அன்னம் முதலிய தின்பண்டங்களிலாவது நீர்முதலிய பானங்களிலாவது தாம்பூலாதிகளிலாவது சேர்த்துக் கொடுக்கப்படுகின்ற பற்பல செந்துகளின் கபாலபஸ்பம், அற்பவீரியவிஷம், மலமூத்திர அவுஷதம், பச்சிலை மூலிகைகள் என்னும் இவைகளாம்.


இடுமருந்தின் இலக்கணம் :- முற்கூறிய மருந்தை அன்ன பானாதிகளில் ஒருவர் கொடுக்க அதை இன்னதென்று தெரியாமல் புசித்தவர்க்கு முகம் வெளிறல், சரீரமிளைத்தல் மந்தாக்கினி, இருமல், இரைப்பு, வாதாதிக்கம், மகோதரம், குண்டிக்காயாகியயகுர்த்த பிலிகத்தில் நோய், துர்ப்பலம், ஈனத்தொனி, மனோதுக்கம், வயிறுப்
பல், நித்திரையில்லாமை, அசீரணம், நாசியமுங்கல், கண்குழிவிழுதல், தன் உடம்பு தனக்குத்தானே பலநிறமாகத்தோற்றல் என்னும்
குணங்களுண்டாவதன்றியும், நரி, பூனை, கீறிப்பிள்ளை, பாம்பு, குரங்கு, நீரில்லா குளம், எரிந்து கருகிய மரம் என்னும் இவைகளை
காணுகின்ற கனவும், உண்டாகும். இக்குணங்கள் ஆரம்பிக்கும் போதே சிகிச்சை செய்யவேண்டியது.

விஷான்ன லக்ஷணம் :- விஷங்கலந்த அன்னத்தை உற்றுப்பார்க்கில், சோர்வு, மூர்ச்சை, வாய்நீர்சுரக்குதல் முதலிய துர்குணம் உண்டாவதன்றியும், அந்த அன்னத்தில் வாசனையும் உருவமும் வேறு விகாரமாகிச் சுபாவநிறம் இறங்கி ஒவ்வொரு அன்னம் பிளவுள்ளதாகவும், சில அன்னம் ஒன்றொடொன்றுசேர்ந்து மண்டை உண்டையாகவும் பார்வைக்கு நிலவைப்போல் தள தளப்பாகவும் புசித்தால் பழய தின் வாசனையைத்தருவதாகவும் வெகு நேரஞ்சென்று சீரணிப்பதகவும் இருக்கும்.

விஷவியஞ்சன லஷணம் :- விஷங்கலந்த கறிப்பதார்த்தங்களை உற்றுப்பார்த்தல், உலர்ந்தது போலவும் கறுத்த கஷாய வன்னமாயும் சுபாவ ருசிநீங்கி வேறு விகார ருசி உள்ளதாகவும் இருக்கும். அக்கரிகளின் மீது அற்ப நுரையும், சீமந்த ரேகையும் நீர்க்குமிழிபோல் சிறிய குமிழியும் எழும்பும்.

விஷம் வைப்பவனுக்கு உண்டாகின்ற லஷணம் :- விஷம் வைக்கின்ற காதகனுக்கு வாயுலரல், சுற்றும் முற்றும் பார்க்குதல் வியர்வையோடு நடுக்கல், தேகம்மரத்தல், பயம், நடக்கும்போது கால் தத்தளித்தல் கொட்டாவி என்னும் இக்குணங்கள்யுண்டாகும்.

விஷான்ன பரீஷை
:- விஷங் கலந்த அன்னத்தை அக்கினியி லிட்டால் சுவாலை எழும்புதலுடன் மயில் கண்டத்தில் நிறைத்தை யொத்த புகையும் அதில் துர்க்கந்த வாசனையும் உண்டாகும்.

விஷான்னசீரணலஷணம் :- விஷம் கலந்த அன்னம் வயிற்றில் சீரணித்தால் நமைச்சல், தேகம், எரிச்சல் அக்கினியிலும் புகையிலும் சிக்கியது போல் வருத்தம், சுரம் இளைப்பு கொப்புளம் எஅழும்புதல் என்னும் இக்குணங்கள்யுண்டாகும்.

ஆசிய கதகரான்ன லஷணம் :- விஷம் கலந்த அன்னத்தை வாயில் போட்டுமிழ்ந்தவர்க்கு, உடனே வாயில் சொள்ளுவடிதல் உதட்டிலும், நாவிலும் திமிர், விருவிருப்பு தந்தங்களில் நோய் முதலியது உண்டாகும்.

ஆமாசயகத கரான்னலஷணம் :- விஷம் கலந்த அன்னத்தை புசித்து அவ்விஷமாவது ஆமாசயஸ்தானத்தில் ஊறினால் தேகத்தில் புடைகள் எழும்புதல், வியர்வை, மூர்ச்சை, வயிறுப்பல், மதம், பிரமை உரோமச்சிலிர்ப்பு, வாந்தி, தாகம், கண்ணோய், மார்பு நோய் என்னும் குணங்களையுண்டாகும்.

பக்குவாதசயகதகரான்னலஷணம் :-விஷ அன்னம் வாதஸ்தானத்தில் ஊறினால் பற்பல வாந்தி, அதிமூத்திரம், அதிசாரம்,சோம்பல்
சர்ரிரம் இளைத்தல், வயிறு வெளிறல், துர்ப்பலம் என்னும் குணங்கள்யுண்டாகும்.

அகிருத்திரம விஷ லஷணம் :- அகிருத்திரம விஷம் என்பது தாவரவிஷம், சங்கம விஷம், என மூவகைப்படும். அவற்றுள் தாவரவிஷத்தைப்பற்றி முதலில் கூறுவோம்.

தாவரவிஷ பேதம் :- விருக்ஷம், பூண்டு, செடி, கொடி, புல் ஆகிய இவற்றின் கிழங்கு வேர், பட்டை, பால், பிசின், இலை, புஷ்பம், காய், கனி முதலியவைகளிலும் பாஷாணம் முதலிய தாதுக்
களிலும் இருக்கிறவிஷம் தாவரவிஷமாம்.

விஷக் கிழங்குகள் :- அலரி, சங்கோசகம், கலப்பைகிழங்கு, தைலகம், கர்க்கடகம், குசபுஷ்பம், கேதுபுஷ்பம், ரோமஹரிஷம் முதலிய கிழங்குகளுக்கு கந்தவிஷம் என்றுபெயர். இவைகளைத்தின்றால் மரணம் சம்பரிக்கும். ஒருவேளை தப்பினால் தேகத்தில் சுரம், விக்கல், தாள்பிடிப்பு, பல் கூசுதல், இரைப்பு, இருமல், மூர்ச்சை, அரோசக, தொண்டை அடைப்பு என்னுங் குணங்க ளுண்டாகும்.

விஷவேரின் பேதம் :- பராமரம், குஞ்சனம், ஹாரிகம், சந்தி ரகம், மருதோன்றி, தர்க்கரகம், பெருங்காயமரமூலம் ஆக இவைகளுக்கு மூலவிஷம் என்று பெயர். இவைகளினால் சோருதல், பிதற்றல், புரளல், பிரமை என்னுங் குணங்களுண்டாகும்.

விஷப்பாலின் பேதம் :- வெள்ளைலொத்தி, புஷ்கரம், நாபி, சேராங்கொட்டை, எட்டி, சரஷ்ப முதலிய பால்களுக்கு க்ஷ£ர விஷமெனப் பெயர். இவைகளினால் நுரைத்த வாந்தியும், நாவு தடித்து
கனத்தலும், மலபந்தமும் உண்டாகும்.

விஷப்பிசின் பேதம் :- மருவு, நாராசகம், தொடரிப்பட்டை, ஆயில்ப்பட்டை, பிசின் முதலியவைகளின் பிசினிகளுக்கு தொக்கார நிரியாச விஷமென்று பெயர். இவைகளினால் அரோசகம், கோழை, வாந்தி, நாவுதடித்தல், வாயில் துர்க்கந்தம் வயிறுப்பலுடன்
வேதனை என்னுங் குணங்களுண்டாகும்.

விஷ இலையின் பேதம் :- பதரம், கரம்பம், எட்டி இலை, பெருமர இலை முதலிய இலைகளுக்கு பத்திரவிஷமென்று பெயர். இவை தின்பதினால் கொட்டாவியும், புரளலும், பிரமையும் உண்டாகும்.

விஷபுஷ்பத்தின் பேதம் :- மஹாகரம்பகம், புங்கின்பூ, தொட்டாற்சுருங்கிபூ, காட்டுமிளகு புஷ்பம் முதல்யவைகளுக்கு விஷபுஷ்பமென பெயர். இவைகளினால் வயிறுப்புதல், வாந்தி, சோருதல், மூர்ச்சை என்னுங் குணங்களுண்டாகும்.

விஷக்கனியின் பேதம் :- கோரை, கர்ப்பூரவழுதலைப்பழம், விஷசெருந்தி, நாயுருவி, மலைவன்னிமரம், வைராடகம், சணாப்கம், ஷாலகம் முதலிய கனிகளுக்கு பலவிஷம் எனப் பெயர். இவைகளினால் அன்னதுவேஷம், தாகம், இரண்டு பீசங்களில் வீக்கம்முதலிய
குணங்கள் உண்டாகும்.

விஷதாதுவின் பேதம் :- தேநாமம், பஸ்மம், திலகம், ரத்தம், முதலிய தாதுகளுக்கு தாதுவிஷம் எனப் பெயராம். இவைகளினால் இரண்டு தாடைகளின் உட்புறத்தில் அனல் வீசுதலும், மூர்ச்சையும் மார்பு நோயும் உண்டாகும்.

1. காலவிஷ நிதானம் :- மேற்கூறியகந்த மூலாதி விஷங்களை வாத காலத்தினின்றால் வாதத்¨தானுசரித்த நோய்களும் பித்த காலத்தில் தின்றால் பித்தாதிக்க நோய்களும் கபாலத்தில் தின்றால் கபாதிக்கம் நோய்களும், வாதகாலத்தில் தின்றால் மார்பு நோய் நரம்பு விருத்தல் எலும்புகளின் கீல்களிலும் நோய் நடுக்கல், புரளல் தேகங்கறுக்கல் உரோமச்சிலிர்ப்பு வாயில் புளிப்பு என்னும் குணங்களும் பித்தகாலத்தில் தின்பதால் சரீரவீக்கம் மாமிச வரளல் மார்பு எரிதல், வாயில் காரம் அக்கினிபோல் சுவாசம் வருதல் அறிவு நீங்குதல் என்னும் குணங்களும் சிலேஷ்மகாலத்தில் தின்பதால் சரீரம் பார்த்து சில்லிடல் வாயில் இனிப்பும் கொப்பும் நூரையும் வீழல், அரோசகம் என்னும் குணங்களை யுண்டாகும்.

ஸ்தானபேத விஷ நிதானம் :- மேற்கூறிய விஷங்கள் தேகத்தில் சிலேஷ்ம ஸ்தானத்தைப் பற்றினால் சாத்தியம். பித்த ஸ்தானத்தைப் பற்றினால் கஷ்ட சாத்தியம். வாதஸ்தனத்தைப் பற்றினால் அசாத்தியம்.

தாவர விஷத்தின் சப்தவேக நிதானம் :-

1. நாவில் கருப்புடன் மரத்தல், வாந்தி, பிரமை, ஆயாசம்.

2. நடுக்கல் வியர்வை, தாகம், தொண்டைக்குள் வேதனை, மார்பு நோய், தாடை உலறல்.

3. கண்களின் கருமை நிறம், மஞ்சள் நிறம் தோற்றல் வயிற்றிலும் குதத்திலும், நோய் இரைச்சல், பொருமல், விக்கல்.

4. தலைநோய், வாயில் நுரைதள்ளல் மாறு முகம் தோற்றல்.

5. சகல கீல்களில் உபத்திரவம்.

6. தோள், இடுப்பு, முதுகு இவ்விடங்களில் நோயுண்டாகி ஞாபகம் நீங்குதல்.

7. விஷம் சுக்கில தாதுவைப்பற்றி ஏறுதல் முதலியனவாம்.

இந்த எழில் ஐந்து வேகம் வரைக்கும் சாத்தியம். மற்ற இரண்டும் அசாத்தியம்.

சங்கமவிஷபேதம் :- அர்ப்பசாதி விஷங்களுக்கும் சீடகம் தேன், சிலந்தி, காய் கரி முதலியவற்றால் வருகிற விஷங்களுக்கும் சங்கமவிஷம் எனப்பெயராம்.

சர்ப்பசாதி பேதம் :- சர்ப்பம் என்பது திவ்வியசாதி சர்ப்பம் பௌம சாதி சர்ப்பம் என இருவகைப்படும். இவற்றுள் திவ்விய சாதி சர்ப்பத்தை முதலில் சொல்லுவோம்.
 

திவ்வியசாதி சர்ப்பபேதம் :- அண்டகோடிகளுக்குள் இராநின்ற சர்ப்பங்களில் தலைமையும் உத்தமசாதியும் கடவுட் பாம்புமா
கிச் சிறப்புற்று அஷ்டதிக்குகளில் வாசஞ்செய்வதே திவ்விய சாதி சர்ப்பமாம். அது வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன் என எண்வகைப்படும்.

பெளமசர்ப்ப ஜாதிபேதம் :- இவை பூமியில் வசிக்கும் சர்ப்பங்களாகும். இவை எண்பத்திரண்டு வகைப்படும். பௌமசர்ப்ப சாதி தருவீகரம் இருபத்தாறு விதங்கள், மண்டலி முப்பத்தாறு விதம், ராஜமந்தம் பதின்மூன்று விதம், நிர்விஷம் நாலுவிதம், வைகரஞ்சம் மூன்றுவிதம் ஆக எண்பத்திரண்டு பேதங்கள் உடையது.

ஆண் சர்ப்பம் :- இது அகலமுள்ள படத்தையும், அதிகதிடத்தையும், அதிக சீறலையும் பெற்றிருக்கும். இவ்விஷம் தலைக்கேறினால் மேல் நோக்கிய பார்வை, வலதுக்கால் பூமியில் பாயா திருத்தல், ஊர்த்துவகாயத்தில் மிகுந்த பலயீனம் என்னும் குணங்கள் உண்டாகும்.

பெண் சர்ப்பம் :- இது குறுகிய படத்தையும், அற்ப சீறலை யும் பெற்றிருக்கும். இவ் விஷத்தினால் கீழ்ப்பார்வையும், இடது கால் பூமியில் பாயாதிருத்தலும், அதோகாயத்தில் பலயீனமும் உண்டாகும்.

அலிச் சர்ப்பம் :- இது மிருதுவுடன் நீண்ட உருவத்தையும், வெளுத்த படத்தையும், மந்த நடையையும், குறைந்த தொனியையும், அற்ப கோபத்தையும் உடையதா யிருக்கும். இவ் விஷத்தினால் ஈனத்தொனி, பேதி, நடுக்கல், பயம், சுரம், சரீரம் காற்றில் பறப்பதுபோல் இருத்தல் என்னும் குணங்கள் உண்டாகும்.

மலட்டுச் சர்ப்பம் :- இது சீக்கிரத்தில் அனந்தம் வேதனையை பிறப்பித்தாலும் முக்கியமாய் வியர்வையைமிகவும் ஒழுகப்பண்ணும்.

பால்ய சர்ப்பம் :- இது இடது கண்ணை கோவைப்பழம்போல் சிவக்க செய்யும். இதில் பெண் சர்ப்பம் விஷம் கொஞ்சம் பேதிக்கும்.

சர்ப்பம் :- இது வலபாகத்தில் கடிக்கும். இவ்
விஷ சர்ப்பம் அப்பக்கத்து கண் ரத்தம்போல் சிவக்கும். பெண் சர்ப்பம் இடபக்கத்தில் கடிக்கும். இவ் விஷத்தினால் தடிப்பு தடிப்பாகி சில ரோகங்கள் பிறக்கும்.

விருத்த சர்ப்பம் :- இது கடிவாயில் வீக்கம், அற்பநோய் பிதற்றல் இவைகளைத் தரும்.

கருப்பச் சர்ப்பம் :- இது சிரசு, உதடு, வயிறு தொடை ஆகிய இடங்களில் நோதல், நா கறுத்தல், உள்நாக்கு வளருதல் என்னுமிக் குணங்ளை உண்டாக்கும்.

குதிகாசர்ப்ப விஷம் :- இது முட்டையிட்ட சர்ப்பம். இதன் விஷத்தால் வயிறு உளைதல் வாயில் ரத்தம் கவ்வுதல் மார்பில் அடைப்பு, கண்ணில் நோயுடன் சிவத்தல்,சர்வாங்கமும்,
குத்தல் என்னும் குணங்களையுண்டாகும்.

வழிச்சர்ப்பம் :- இது எப்போதும் கடிப்பதற்கே வழி கட்டிக்கொண்டிருக்கும். இது கடித்தால் சீக்கிரம் மரணக்குறிகள் உண்டாகும்.

சங்கை விஷம் :- சர்ப்பத்தை சடுதியில் கண்டு வாய்க்குளறி நடுக்கி, மூர்ச்சித்து விழுந்தாலும், பழுதை என கையால் தொட்டு பின்பு பாம்பு எனக்கண்டு திகில் அடைந்தாலும் தனது பக்கத்தில் சர்ப்பம் குதிக்கக்கண்டு மேலில் ஒருவன் போட பாம்பென்று இதனால் பொறிகலங்கி நாவரளல், மூர்ச்சை சரீரம் நரங்கி துவைத்தது போலிருத்தல் இளைப்பு, சுரம், பேதி, தாகம், வாந்தி, சோருதல் என்னும் குணங்களையுண்டாகும்.

மித்தைவிஷம் :- எந்த சர்ப்பமாவது ஒருவனை வாயால் கவ்வி பிடித்த நிலையில் பக்கத்தில் நின்ற ஒருவன் அது பாம்பல்ல பாம்பல்ல என்று உறுதியாகச் சொல்லுவானாகில் விஷம் ஏறாது

மகாவிஷ சர்ப்பம் :- மயானம், சாவடி, பாழும்வீடு, பாழுந்தோட்டம், கோயில் நாற்சக்தி கூடிய இடம், வேப்பமரம், மரப்பொந்து
கான்யாறு, திரிசூலம் மச்சரேகை ஆகிய இந்த குறிகளை யுடைய சர்ப்பங்களுக்கும், சிவந்த நேத்திரமும், சிவந்த மூக்குமுள்ள சர்ப்பங்களும் மகாவிஷ சர்ப்பங்களாம். இறப்பதற்கு ஒரு கெடுவும் இல்லை. ஆனால் அவ்வுஷதமி இவைகள் ஒரேகாலத்தில் கேரிட்டு அவர்களுக்கு மாறுவதுமாவது அகத்தில் யாதேனுமாவது உண்டாகும். எளிதில் இறங்காமையால். மகாவிஷ சர்ப்பம்எனப்
பெயர் பெற்றவையாம்.

அற்ப்ப விஷ சர்ப்ப நிதானம் :- பசி, தாகம், வியாதி அக்கினி காற்று, தோலுரிதல், விஷங்கக்குதல் ஆகிய இவைகளையும் அடிப்பட்ட சர்ப்பங்களுக்கும், சலம் நிறைந்த தடாகம், முள்ளுப்பாதை, மந்திரவாதிகள் இருக்கின்ற ஊர் பரதேசம் இவ்விடங்களிலுள்ள சர்ப்பங்களுக்கும், வலிவு குறைய சர்ப்பங்க்ளுக்கும் அற்ப்பவிஷம். இது எளிதில் நீங்கும்.

விஷக்கடி நிதானம் :- கடிவாயைப்பற்றி விஷம் ஏறினால் அவ்விடத்தில் நோயும், தினவும், வீக்கமும் எரிச்சலும் உண்டாகும்.
இக் குணங்களில் ஒன்றேனும் இல்லாதிருக்கில் விஷம் ஏறவில்லையென்றே நிதானிக்கவும்.

விஷபரீ¨க்ஷ நிதானம் :- சர்ப்பம் கடித்தவுடன் கசப்பு வஸ் துக்களைத் தின்றால் அச்சுவை மாறுபடுதல், விரல்களில் நகங்களில் கிள்ளினாலும் தலைமயிரைப்பற்றி இழுத்தாலும் நோய் தெரியாமை, காதை மூடில் தொனி இல்லாதிருத்தல், சோமசூரிய அக்கினியும் விளக்கும் நேத்திரத்திற்கு தோற்றாமை என்னும் குணங்களிருந்தால் விஷந்தலைகேறிய தென்றே நிதானித்து சிகிச்சை செய்யவும்.

பல்லின்விஷ நிதானம் :- விஷப்பை படாமல் பல்லுமாத்திரம் தேகத்தில் படுமாகில் கோட்டுவாய்ச் சலம்போல் வாயினின்றும் சலம்வடியும். விஷமே ஏறினால் நொப்பும் நுறையும் விழும், இவ்விஷமானது கொஞ்சம் வியாபித்தாலும் அது சப்த தாதுமுற்றி
லும் விரைவில் பரவும். இதனால் ஞாபகமறதியும் இரைப்பும், சரீரத்தில் கருவளையலை ஒத்த நிலமும் உண்டாகும்.

விஷப்பல் அழுந்தும் நிதானம் :- சர்ப்பங் கடித்து ஒரு பல் அழுந்தினால் விஷம் இல்லை. மற்ற மூன்று பற்களும் அழுந்தினால் விஷம் உண்டு. அவற்றுள் இரண்டு பல் அழுந்தினால் அவ்விஷம் மந்திரத்தினால் சாத்தியமாம். நான்கு பல்லும் அழுந்தினால் அசாத்தியமாம். அன்றியும் ஒரு தந்தமாவது அழுந்தி அவ்விடத்தில் திருகியதுப்போல் சக்கிராகாரமாகத் தோற்றப்பட்டு அதி
னின்றும் ரத்தம் வடிந்தாலும் அந்த இடம் ஆமை ஓட்டைப்போல் தடித்து வீங்கினாலும் அசாத்தியம்.

விஷபல்லின் லக்ஷணம் :- சர்ப்பங்களுக்கு, காளி காளராத்திரி எமன் எமதூதன் என நான்கு பற்கள் முளைத்திருக்கும். இவற்றுள் முதலாவது காளி என்னும் பல்பட்டால் அவ்விடத்தில் புள்ளடிப்போலகாயமுண்டாகி அதினின்றும் பனிநீர்போல் சலம் வடியும் போது விஷமானது தோலைப்பற்றி ஏறும். இதனை கால் அறிந்து தியானத்தால் உபசரிக்க விஷந்திரும்பும், அதனுடன் காளராத்திரி என்னும் பல்லும் பட்டால் அவ்விடத்தில் முக்கோணம் போல் காயம் உண்டாகி அதினின்றும் மஞ்சள் நிறமான சலம் வடியும். அப்போது விஷமானது மாமிசத்தைப்பற்றியதென்று அறியவும். இதனை அரைக்கடி என்று அறிந்து மணிமந்திரத்தால் உபசரிக்க விஷந்திரும்பும். அவ்விரண்டுடன் எமன் என்னும் பற்பட்டால் அங்கு தொட்டிப்போல் காயம் உண்டாகி அதினின்றுஞ் செந்நீர் வடியும் அப்போது விஷமானது எலும்பைபற்றியதென்றும் இதனை முக்கால் கடி என்றும் அறிந்து மூலி
கை, நசயம், கலிக்கம், ஆக்கிராணம் முதலியவைகள் உபசரிக்க விஷந்திரும்பும். அம்மூன்றுடன் எமது தன் என்னும் பல்லும் பட்டால் அவ்விடத்தில் வில்லைப்போலும், பிறையைப்போலும் காயம் உண்டாகி அதினின்று கழுநீரைப்போன்ற சலம் வடியும். அப்போது
விஷமானது மூளையைப் பற்றி ஏறும், இதனை முழுக்கடி என்று மணிமந்திர அவுஷதங்களாலும், தெய்வ வலியாலும் உபசரிக்க விஷந்திரும்பும்.

கடிநிதானம் :- சில சர்ப்பங்களுக்கு தாடைக்குள் முள்ளை போல் ஒவ்வொரு கோரைப்பற்களிருக்கும் அது பட்டு விஷம்
ஏறினாலும் உடனே அபாயமாம். சர்ப்பங்கடித்து பல் அழுகிய இடத்தில் முகர்ந்தால் தாளை பலர் மணம் வீசினால் நல்லபாம்பு, பாதிரிப்பூ மணம் வீசினால் மழலைப்பாம்பு, புளியன்பு மணம் வீசினால் வீரியம்பாம்பு, மல்லிகைப்பூ மணம் வீசினால் மண்டலிபாம்பு, மிளகு சுக்கு இவைகளின் மணம் வீசினால் சிறிய பாம்பு என நிதானிக்கவும். இம்மணங்கள் ஒன்றும் வீசாமல் சர்ப்பத்திற்கு பகையான மணம் வீசினால் சர்ப்பக்கடி அல்லவென்றும் அறிந்து கீடக சிகிச்சைகளை உடனே செய்ய
வேண்டியது. எந்த சர்ப்பமாவது, புருவ மையம் பஞ்சேத்திரியம் தலை, நெற்றி, தாடை, உதடு, தாழ்வாய் கட்டை, நெஞ்சு தோள் உள்ளங்கை, அக்குள் ஸ்தனம் மார்பு, அடிமார்பு, தொப்புள், வயிறு ஆண்குறி உள்ளங்கால் கீல் என்னும் இவ்விடங்களில் கடிக்கில் தப்பாமல்
மரணஞ்சம்பவிக்கும்.

பாழுங்கோயில், பாழும் வீடு, பாழூர், ஆலமரம், அரசமரம் புன்னைமரம், முருங்கை மரம், சந்தை கூடும் இடத்து மரம் புதர், நந்தவனம், காணல் படுக்கை, பிறம்புதர், மயானம், ஏறிக்வாரம் ஐயனார் கோவில் நாற்சந்திவீதி, முச்சந்தி வீதி என்னும் இவ்விடங்களில் இருக்கின்ற எந்த சாதி சற்பமும் சந்தி வேளையில் கடிக்குமாயின் அவ்விஷம் அசாத்தியம்.

எந்த சர்ப்பமாவது அனந்தம் பேர் கூடுகிற பொது வருஷம் மயானம் என்னும் இவ்விடங்களில் பருவம், அமாவாசை, பஞ்சமி பிரதமை அஷ்டமி, நவமி ஆகிய இந்த நதிகளில், சூர்யோதயகாலம் மாலைமயங்கும் காலம்,அயர்ந்து நித்திரை செய்கின்ற காலம் பாதிராத்திரிகாலம ஆகிய இக்காலங்களில் கடிக்கில் மரணமேயாம்.

சர்ப்பமானது பரணி கார்த்திகை, ஆயிலியம், விசாகம், பூரம், புரட்டாதி சதயம் ஆகிய இந்த நக்ஷந்திரங்களோடு பருவகாலத்திலும் நிருதிமூலையிலும், சந்தியான காலத்திலும் கடிக்கில் அசாத்தியமாம். அன்றியும், மகம், திருவோணம், மூலம், சித்திரை ஆகிய நக்ஷத்திரங்களிலும் ஜன்மநாள் அநுஜன்மநாள், திரிஜன்ம நாள், இதுகள் சேர்ந்த அவிட்டநக்ஷத்திரத்திலும், நவமியிலும்
கடிக்கில் அசாத்தியம்.

அசாத்திய விஷக்குறி :- ஏறினவிஷம் மந்திர தியான அவுஷதங்களில் திரும்பாதிருக்கையில் நகம், உதடு, உள்ளங்கை, கரியைப்போல் கறுக்குமாயின் அசாத்தியம். மேலும் எந்த சர்ப்பவிஷத்தினாலாவது தலையில் இருக்கின்ற ரோமம், உதிரல், மூர்ச்சை, மேற்சுவா
சம், விக்கல், இருமல், வாந்தி, மார்புகனத்தல், நடுக்கல், விகார வேதனை, முடிசோருதல், கண்சிவக்குதல், தொண்டை அடைப்பு, நாவல்பழம்போல் பற்கறுத்தல், ஆமையோட்டைப்போல் முதுகு உயருதல் நவத்துவாரத்திலும் ரத்தம் ஒழுகுதல் என்னும் இக்குணங்களுண்டாயின் அசாத்தியமாம். அன்றியும் கடிக்கப்பட்ட இடத்தில் வீக்கமுண்டாகி ரத்தங்கம்மல், நாசிமெலிந்து சிறுத்து அழுந்தி சில்லிடுதல், முதுகும், ஆண்குறியும், முகமும் சில்லிட்டு கறுத்து தோணுதலுடன் உரோமமும் சில்லிடுதல், கீல்கள் தளரல், காலும் கையும் கறுக்குதல், வாயில் நுரை விழுதல், தேகம் நோயோடு நறுக்கிந் துவைத்ததுப்போல் இருத்தல், மலம் நழுகல் என்னும் குணங்கள் உண்டாகும்.

சாமானிய விஷக்குறி :- சர்ப்பம் கடியுண்டவனுக்கு மலமூத்திரம்நழுகுதல், மார்பில் கனத்தலுடன் குத்தல், உரோமச்சிலிர்ப்பு,
வாந்தி, தாகம், நாசியால் பேசுதல், கீல்களில் நோய், கண்சிவத்தல் அல்லது கறுத்தல் என்னும் இக்குணங்கள் உண்டானாலும், சந்திர சூரிய நக்ஷத்திர கிரகங்கள் கண்ணுக்குத் தோன்றவிட்டாலும், கண்ணாடி நெய் தைலாதிகளில் முகந்தெரியாவிட்டாலும் அசாத்தியம். ஆனால் இப்போது சொல்லிய குணங்கள் எல்லாம் சகல சர்ப்ப விஷத்திற்கும் பொதுவாயிருக்கும். எந்த சர்ப்பமாவது கடித்தவுடன் படத்தைவிரித்து ஆடினாலும் தரையிற்புரண்டாலும், கடித்த இடத்தில் ஆடிப்பின்பு அசைவற்றுக்கிடந்தாகும், கடியுண்டவனுக்கு விஷம் மீளாதென் றறியவும்.

கருநாகம் :
- இதை கிருஷ்ணசர்ப்பம் என்பார்கள். இது அவுஷதாதிகளால் இறங்கினாலும் இரண்டு காதுகளை செவிடாக்கும்.

சிறுநாகம் :- இது தருப்பை அகலமுள்ள படத்தையும், ஈர்க்கை யொத்த பருத்த உடலையும்பெற்று தாழமலர்க்குள் வாசமா
யிருக்கும். இதனை பூ நாகன், புல்நாகன் என்பார்கள். இதன் விஷம் மிகவும் கொடியது.

விரியன் :- இது பெருவிரியன், ரத்தவிரியன், செவ்விரியன், நீர்விரியன், பொறிவிரியன், புல்விரியன் என ஆறுவகையாம். பெருவிரியன்விஷத்தால் மயக்கம், தயக்கம், உறக்கம் வெப்பம், கடித்தவாயில் ரத்தமும் வீக்கமும் எரிச்சலும் உண்டாகும்.

ரத்தவிரியன் விஷமானது வயிற்றில் வியாபித்தால் வயிறு வலியை உண்டாக்கிக் கொல்லும் கடித்தவாயில் ரத்தமும், மேலில் தடிப்பும் பிறக்கும்.

இது தவிர நான்கு வித வீரியன் விஷத்தினால் கடிவாயில் மாமிசமிகுதியும், தடிப்பும், தேக எரிச்சலும், வலியும், சோர்வும் நித்திரை மயக்கம் உண்டாகுமென்றரிக.

வழலைச்சர்ப்பம் :- இது கடித்த இடத்தில் ரத்தமும் அனற்றலும் உண்டாகும்.

கருவழலைச்சர்ப்பம் :- இது சரீரத்தில் காங்கையுடன் அதிக வியர்வை, உள்ளங்கால், உள்ளங்கை சிவப்பும் கோழையால் மார்பில் அடைப்பு, முதலிய அநேக வேதனையும் உண்டாகும்.

மூர்க்கண் :- இது கடித்த இடத்திலும் முதுகிலும் வேதனை பிறப்பது தவிர அவ்விஷத்தினால் வாயும் கழுத்தும் முறிக்கிகொள்ளல், குறல் நெறிதல், தேகம் பற்றல், தலைசுழலல், என்னும் குணங்களையுண்டாகும்.

மயக்குச்சர்ப்பம் :- கண்ணில்விஷத்தையுடையது. இப்பார்வை சற்று நேரம் படியினும் உடனே அவர்களுக்கு மயக்கமும் கண்களில் சுழற்ச்சியும் உண்டாகும்.

முறுக்குச்சர்ப்பம் :- இது சரீரமெல்லாம் திருகுகள்ளியைப்போல் முறுக்கிக்கொள்ளுதலும், பதறலையும் உண்டாக்கும்.

சாரைப்பாம்பு :- இது நீண்ட உடலையும் வேக நடையையும் பெற்று மனிதரை வாலால் அடிப்பதும், பாதமுதற் மார்புவரைக்கும் சுற்றி இடுப்பை ஒடிப்பதும் செய்யும்.

புடையன் :
- இது நீண்ட உருவத்தையும் அழுக்கு நிறத்தையும் பெற்று வாலின் முனையால் குத்தி தேகத்தில் புடைகள் மிக உண்டாக்கும்.

மண்ணுளிப்பாம்பு :- இது பாக்கு, ரத்தம் இவைகளின் நிறத்தைப்பெற்று நீண்ட பயற்றங்காய் பிரமாணமுள்ளதாக இருக்கும். செவியில் நுழையில் அபாயமாம். இவ்விஷத்தினால் பருவகாலந்தோறும் சிறு சிறு தடிப்பும் நமைச்சலும் உண்டாக்கும். இதனை சிறு பாம்பு கடி என்பர்.

காலியாங்குட்டி :- இது ஒரு சரண் இரண்டு சரண் நீளத்துடன் தேஜசு குறந்த்திருக்கும். இதற்கு கடிக்கத்தெரியாது. கடுக்கில் பெருஞ்சிகிச்சை செய்ய வேண்டும்.

கண்குத்திப் பாம்பு :- இது பச்சைநிறத்துடன் நீண்ட உருவத்தைப்பெற்று விரிக்ஷங்களில் வாசஞ்செய்யும். நேரிட்டவர் கண்களைக் குத்தும். இதுவே பச்சைப்பாம்பு.

வெண்ணாந்தைப் பாம்பு :- இது பருத்த செக்கு பனைமரம், தூண் முதலிய பிரமாணங்களையும், உடலெல்லாம் வழுவழுப்பையும் உள்ளதாய், வாலும் தலையும் ஒரே தடிமனாய் மேலில் வெளுத்த வரி களைப்பெற்று, கோழி, ஆடு, மாடு முதலியவைகளை விழுங்குவதாயிருக்கும். இதை மலைப்பாம்பு, தாசரிபாம்பு என்று வழங்குகிறார்
கள். சிலர் யானையையும் மனிதைகளையும் கூட விழுங்குமென்று சொல்லுகிறார்கள்.

சர்ப்பவிஷ வேகபேதம் :- சகல சர்ப்ப விஷத்திற்கும் வாயு வேகம், தேயுவேகம், வருணவேகம் என மூன்றுவித வேகங்களும் உட்பிறிவும் உண்டு.

வாயுவிஷ வேகநிதானம் :- வாயுவைப்பற்றி விஷம் ஏறும் போது எட்டுவித வேகம் உண்டாகும். 1-வது மூர்ச்சையும் மிகுந்த வியர்வையும் உண்டாதல், 2-வது சரீரம் வெதும்புதல், 3-வது கண் சொருகுதல், 4-வது செவியை அடைக்குதல், 5-வது நெஞ்சில் கபங்கட்டுதல், 6-வது அறிவு மாறுதல், 7-வது மேல்மூச்சு அதிகமாய் வாங்குதல், 8-வது உயிர் நீங்குதல் என்பனவாம். இவ்வேகம் பிறக்குமுன் விஷமானது 50-மாத்திரை காலம் நின்று பிறகு தேகத்தில் வியாபித்துச் சிரசில்
ஏறும்.

2. தேயுவிஷ வேகநிதானம் :- தேயு என்னும் பித்தத்தைப்பற்றி விஷம் ஏறும்போது பத்துவித வேகம் உண்டாகும். அவையாவன :-

1-முகங் கறுத்து கண் சிவக்குதல், 2-ரோமங்களின் முனைகள் பிளந்து சிறுநீர் கறுத்திரங்கி முகம் வெளுத்தல், 3-வேதனையுடன் சரீரம் நீண்டு சிந்தை மயங்கி வாய் குளறுதல், 4-சோபம் பிறந்து குடலில் எரிச்சல் கண்டு தேஜசுமாறி நாசியால் சலம் வடிகுதல், 5-தேகமும் கண்ணும் விடவிடத்து ஆடுதல், 6-வது அங்கம் பதைத்து இளைத்து நாசியால் சலம்பெருகி மொழிமாறிப் பல்லை கடிக்குதல், 7-வதும் 8-வதும் கபங்கட்டி சுவாசம் எழும்பி மேல்பார்வை பார்க்குதல், 9-வது உயிர் அடங்கியிருக்குதல், 10-உடலை விட்டு ஆவி நீங்குதல் என்பனவாம். வேகங்கள் பிறக்குமுன் விஷமானது கடிவாயில் 150-மாத்திரை காலம் நின்று பின்பு ஏறும்.

3. வருணவிஷ வேகநிதானம் :
- வருணன் என்னும் சிலேஷ் மத்தைப்பற்றி விஷம் ஏறும்போது பத்துவித வேகம் உண்டாகும்.
அவையாவன :-

1. தேகஞ்சிவந்து ரோமம் சிலிர்க்குதல் 2. வாயுலர்ந்து தேகங்கறுத்து வெதும்புதல், 3. தேகத்தில் உட்புறத்தில் உளைதல் 4. கபம் அதிகரித்து மனம் தத்தளிக்குதல், 5, தலை நடுக்கலும் அறிவழிதலும் உண்டாதல், 6. கண்கள் மலரவிழித்து மேல் நோக்குதல், 7. அவையவம் முறைக்குதல். 8. சரீர வியாபாரம் அடங்குதல், 9. சுக்கிலம் நசிக்குதல். 10. உயிர் நீங்குதல் என்
பனவாம். இவ்வேகம் பிறப்பதற்கு முன் விஷமானது கடிவாயில் 150 மாத்திரை காலம் நின்று பின்பு ஏறும். உயிர் நிலை விழிக்குறி :- விஷத்தினால் உயிர் அடங்கிய காலத்தில் கண்கள் மேல் நோக்கி நிலைக்கண் பட்டிருக்கில் உயிரானது ஊர்த்துவகாயமான மேல்புறத்தில் அடங்கியிருக்கும். கீழ்நோக்கி யிருக்கில் உயிர் கீழ்தங்கியிருக்கும். பக்கங்களில் நோக்கியிருக்கில் உயிர்பக்கங்களில் அடங்கியிருக்கும். விழித்தபடியே சம பார்வை யாக யுருக்கில் உடலை விட்டு உயிர் நீங்கினதென்றரிக.

உயிர் பரிஷை நிதானம்
:- விஷத்தால் இறந்தவனது தேகத்தில் பிறம்புகொண்டு அடிக்கில் தடித்தாலும் அல்லது வெதும்பலோடு
சிவந்தாலும் சவத்தை குளத்தில் போடில் அழுத்தினாலும், சுத்த சலத்தை மேலே சொறியில் குளிர் கண்டு ரோமஞ் சிலிர்த்தாலும் கைவிரல் கால் விரல்களில் நெட்டம் முறிந்தாலும் தலைமயிரைப்பற்றி இழுக்கில் சொற்ப வலிவுடன் அசைவு இருந்தாலும் குடோரி யிடில் அதன் வழியாக சிவந்த ரத்தம் ஒழுகினாலும், தாதுக்களில் ஒன்றாவது சொற்ப நடையாக நடந்தாலும், உயிர் அடங்கியிருக்கின் றதென்பதை நிதானித்து சிகிச்சைகளை செய்தல் வேண்டும். ஆகையால் விஷத்தால் உயிர் அடங்கிய சவத்தை 90 நாழிகை வரையிலும் தகனம் செய்யப்படாதென்பது சிலர் ச்ம்மதி. சாதாரணமாக மேற்கூறிய காரணங்களால் உயிரானது கபாலத்தில் அடங்கி யிருப்பதால் தங்களால் கூடிய அளவில் மகாவிஷசிகிச்சைகள் செய்து ஒருவாரம் அல்லது 10 நாள் வரையிலும் பார்த்து பிறகு தகனமோ அல்லது அடைக்கலமோ செய்தல் நலமென்று அநேக முனிசிரேஷ்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சர்ப்பவர்க்கச் சத்ருவகை :- பாம்புகளுக்கு இருதலைமணியன், செந்நாய், மயில், கோழி, கருடன் எருதின் குழம்பு, மின்னல், இடி, கீரி, கரடி, பன்றி, செம்போத்து, முதலை, ஆந்தை கூகை, மான், புது வெள்ளம், புகைமூடிய அனல் முதலியவைகளும் மனிதரும் சத்துருக்களாம்.

விஷ விருத்தி லக்ஷணம் :- பாம்பின் கடியினால் அற்ப விஷம் ஏறியிருந்தாலும் அது பசி தாகம், துக்கம், பயம், கோபம், மிகுந்த நகைப்பு, அக்கினித் தொழிலில் இருக்குதல், சுடுகையான நிலத்தில் படுக்குதல், கீழ்காற்றில் திரிதல், இரட்டை அலரிப்பூவை முகருதல்,சரீரசுட்கம், பேதி அசீரணம், துர்ப்பலம் பித்தவாயு முதலிய ரோகத்தினால் மெலிதல், யானை, மேகம், எலி, மேளம் முதலிய தொனிகளை யுற்றுக் கேட்குதல் என்னும் இவைகளினால் மகா விஷமாகும்.

விஷத்திற்கு ஆகும் பத்தியம் :- விஷம் கடித்தவர்களுக்கு, பழகிய அரிசி, சாமையரிசி, தினையரிசி, பயறு, கறுப்பு பயறு, துவரை, சிறுகீரை, பாலைக்கீரை, இலந்தை கொழுந்து, புளியாரை, சிறுகத்திரிக்காய், மாதுளங்காய், நெல்லிக்காய், விலாம்பழம், நாவற்வழம், இந்துப்பு முதலிய வஸ்துக்களும், காரமில்லாத அன்ன
பானாதிகளும் ஆகும்.

விஷத்திற்கு ஆகாத பத்தியம் :- விஷம் தீண்டப்பெற்றவர்களுக்கு பகல்நித்திரை, சையோகம், கோபம், அதிக நடை, தீக்ஷண
வெய்யில், ஸ்நானம் முதலிய செய்கைகளும், கள்ளு, எள்ளு, கொள்ளு, சைத்தியபண்டம், காரமாகிய அன்னபானாதிகள் ஆகிய இவைகள் ஆகாதென்றறிக.

ஆருட நிதானம் :- பாம்புகடி உண்டானவன் இடத்திலிருந்து வந்ததூதன் ஊர்த்துவமுக திருஷ்டியால் பார்த்துக்கொண்டு இன்னானை விஷந் தீண்டியதென்று சொல்லி அழைப்பானாகில் அவ்விஷம் மீளாதென்று அறியவும். தூதன் சொன்னசொல்லில் இருக்கும் அக்ஷரங்களை இரட்டித்து அத்தொகையை மூன்றுபேருக்கு கொடுக்கில் மிகுதியில்லாவிடில் அவ்விஷம் மீளாதென்றும் ஒன்று இரண்டு
மிகுதியானால் மீளுமென்றும் அறியவும். மற்றும் வைத்தியன் யாகஞ் செய்யுங்காலம், நித்திரை செய்யுங்காலம், எண்ணெய் இட்டுகொள்ளுங்காலம், மூலிகை முதலியவைகளை கத்தியால் நறுக்கின்றகாலம், மனசஞ்சலமாகயிருக்குங்காலம் ஆகிய யிக்காலத்தில் தூதன் வந்து சொல்வானேயாகில் அவ்விஷம் மீளாதென்று அறியவும்.